கவர்னர் தேர்தலில் 14 வயது பள்ளி சிறுவன் போட்டி

புதன், 15 ஆகஸ்ட் 2018 (12:12 IST)
அமெரிக்காவில் கவர்னர் தேர்தல் போட்டியில் பள்ளி படிப்பை மேற்கொண்டு வரும் 14 வயது சிறுவன் ஒருவன் போட்டியிடுகிறான்.
அமெரிக்காவில் தேர்தலில் போட்டியிட வயது வரம்பு தளர்த்தப்பட்டுள்ளதால், வெர்மோண்ட் மாகாணத்தை சேர்ந்த எதான் சோனே பார்ன் என்ற 14 வயது சிறுவன் அங்கு நடைபெற உள்ள கவர்னர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிடுகிறான். 
 
தேர்தலை முன்னிட்டு எதான் பல்வேறு இடங்களுக்கு சென்று பிரச்சாரம் செய்து வருகிறான். மேலும் இணையம் வழியாகவும் பிரச்சாரம் செய்து வருகிறான்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்