சீனாவில் 95 சதவீதம் உருமாறிய ஓமிக்ரான் பரவல்: அதிர்ச்சி தகவல்

வியாழன், 5 ஜனவரி 2023 (14:28 IST)
சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 95% பேர் உருமாறிய ஓமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன 
 
சீனாவில் கடந்த சில நாட்களாக கட்டுக்கடங்காத அளவில் கொரோனா வைரஸ் மிக அதிகமாக பரவி வருகிறது. இந்நிலையில் சீனாவில் மேற்கொண்ட பரிசோதனையில் 95 சதவீதம் பேருக்கு உருமாறிய BF 7 ஓமிக்ரான் என்ற வைரஸ் பரவி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 
 
சீனாவில் உள்ள நிலைமையை கண்காணித்து வருவதாகவும் சீனா எந்த உதவி கேட்டாலும் உலக சுகாதார மையம் செய்ய தயாராக இருப்பதாகவும் ஆனால் அதே நேரத்தில் சீனா உண்மை நிலையை வெளி உலகிற்கு அறிவிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது
 
 சீனாவில் புதிய வகை உருமாற்றம் அடைந்த ஒமிக்ரான் வைரஸ் தான் 95% பரவி உள்ளது என்ற தகவல் உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்