அமேசான் காட்டுத் தீயை அணைக்க 8 லட்சம் தீயணைப்பு வீரர்கள்...

ஞாயிறு, 25 ஆகஸ்ட் 2019 (15:57 IST)
அமேசான் காட்டில்  வாழும் அரியவகை உயிரிங்கள், பறவைகள், பூச்சியினங்கள் எல்லாம் அழிந்துவிட்டதாக தகவல் வெளியாகின. இந்நிலையில் அமேசான் காடுகளில் பற்றி எரியும் காட்டுத் தீயை அணைக்கும் முயற்சிக்கு உதவ ஆயுதப் படைகளை அனுப்ப பிரேசில் அதிபர் போல் சாயர் போல்சனாரூ உத்தரவிட்டுள்ளார். 
இயற்கை வளங்கள் உள்ள பகுதிகள், பூர்வகுடிகள் வாழும் இடங்கள், குடியிருப்புப் பகுதிகளை ஒட்டியுள்ள காடுகள் ஆகிய இடங்களுக்கு படையினர் அனுப்பப்படுவர்.
 
அமேசான் தீ கட்டுப்படுத்தப்படும் வரை பிரேசில் உடனான வர்த்தக ஒப்பந்தத்தை அமலாக்கப் போவதில்லை என்று பிரான்ஸ் மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகள் கூறியுள்ளன.
 
பிரேசிலில் இருந்து மாட்டிறைச்சி இறக்குமதி செய்யப்படுவதை தடை செய்வது குறித்து பரிசீலிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்தை பின்லாந்து கோரியுள்ளது.
 
காட்டுத் தீயை அணைக்க சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்கள் பிரேசிலின் பல்வேறு நகரங்களிலும் வெள்ளியன்று போராட்டம் நடத்தினர். இது உலகெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி  வருகிறது.
 
இந்நிலையில் பொலிவியாவில் உள்ள அமேசான் காட்டில் 8 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் பரவியுள்ள காட்டுத்தீயை அணைக்க தீயணைப்புத்துறையினர் போராடி வருகின்றனர்.
 
இதில் உலகமே கவலை அடையக்கூடிய ஒரு விஷயம் என்றால், காட்டுத் தீயில் எரிந்த பகுதிகள் எல்லாம் மீண்டும் வனச்சோலைகளாக உருவாக குறைந்தது 200 ஆண்டுகள் ஆகும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்