இந்த கார்கள், இரண்டாம் உலகப்போரின் போது பிரான்ஸ் நாட்டுக்குள் ஹிட்லர் தலைமையிலான நாஜிப்படைகள் நுழைந்தபோது அங்கு வாழ்ந்த செல்வந்தர்கள் தங்களுடைய கார்கள் நாஜிக்களின் பார்வையில் சிக்கினால் அவற்றை பறிமுதல் செய்து விடுவார்கள் என அஞ்சி மறைத்து வைத்திருந்தவை ஆகும்.
19-ம் நூற்றாண்டில் மிகவும் பிரபலமான ‘சூப்பர் மாடல்’ கார்களாக இருந்த சிட்ரோயென்ஸ், ரெனால்ட்ஸ், பியூகியோட்ஸ் மற்றும் ஓபேல் ரக கார்கள் இன்று துருப்பிடித்து, சிதிலமாகி வரலாற்று கலைப்பொருட்களாக காட்சி அளிக்கின்றன.