62 வயதில் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் காதல் திருமணம்

வெள்ளி, 9 ஜனவரி 2015 (14:30 IST)
முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரும், அரசியல் கட்சித் தலைவருமான இம்ரான் கான் தனது 62 ஆவது வயதில் தொலைக்காட்சித் தொகுப்பாளரை திருமணம் செய்துள்ளார்.
 
முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரும், ’பாகிஸ்தான் தெக்ரீக்-இ-இன்சாப்’ என்ற அரசியல் கட்சித் தலைவருமான் இம்ரான்கான் ஏற்கனவே 1995 ஆம் ஆண்டு இங்கிலாந்தை சேர்ந்த ஜெமிமாவை திருமணம் செய்தார். பின்னர் 2 குழந்தைகளுக்குப் பிறகு 2004 ஆம் ஆண்டு பிரிந்தனர்.
 

 
இதனை தொடர்ந்து இம்ரான்கான் தொலைக்காட்சி தொகுப்பாளரான ரேஹம் என்பவரை காதலிப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இந்நிலையில் இம்ரான்கான், இஸ்லாமாபாத்தில் நேற்று ரேஹமை எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டார். 
 
ரேஹமும் ஏற்கனவே திருமணமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்