கைப்பையில் வைத்து கொண்டுசெல்லப்பட்ட பச்சிளம் குழந்தை .. திடும் சம்பவம்

வியாழன், 5 செப்டம்பர் 2019 (21:32 IST)
பிலிப்பைன்ஸ் நாட்டில் ள்ள விமானத்தில், கைப்பையில் மறைத்துவைத்து ஒரு பச்சிளம் குழந்தையை எடுத்துச் சென்ற பெண்ணை போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
பிலிப்பைன்ஸ் நாட்டுச் சட்டத்தின்படி குழந்தைகளை வேறு நாட்டுக்கு அனுப்புவதாக இருந்ததால், அவர்களுடைய பெற்றோரின்  அனுமதிக் கடிதத்தைக் காட்டினால் மட்டும்தான்  அனுபதிக்கப்படும்.
 
இந்நிலையில் அந்நாட்டு விமான நிலையத்தில் பிறந்து வெறும் 6 நாட்களான கைக்குழந்தையை, ஒருபெண் தனது கைப்பையில் வைத்துக்கொண்டு சென்றார். அவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போலீசார், அந்தக் குழந்தையை மீட்டனர். 
 
பின்னர், அக்குழந்தையை குறித்த அனுமதிக்  கடிதம் எதாவதும்  இருக்கிறதா எனக் கேட்டனர். அதற்கு அப்பெண் எதுமில்லை எனக் கூறியுள்ளார். இந்நிலையில் பச்சிளம் குழந்தை என்பதால் இக்குழந்தை யார் ? எதற்காக கொண்டு செல்கிறீர்கள்? எங்கு கொண்டு செல்கிறீர்கள் என்பது போன்ற  தீவிரமான விசாரணையை அப்பெண்ணிடம் பொலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்