450 குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கிணற்றில் கண்டுபிடிப்பு

ஞாயிறு, 11 செப்டம்பர் 2016 (18:43 IST)
கிரீஸ் நாட்டில் ஒரு பழைய கிணற்றில் ஏரத்தாள 450 குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


 

 
கிரீஸ் நாட்டின் தலைநகர் ஏதென்ஸில் உள்ள ஒரு பழைய கிணற்றில் ஏரத்தாள 450 குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
இது குறித்து நடத்தப்பட்ட சோதனையில், குழந்தைகள் சிலர் இயற்கையான நோயினால் இறந்துள்ளனர் என்றும் மேலும் பலர் மூளைக்காய்ச்சலினால் இறந்துள்ளனர் என்றும் கூறியுள்ளனர்.
 
சுமார் கி.மு150- கி.மு165 இந்த வருடங்களுக்கு இடையில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்த சம்பவத்தால் இத்தகைய நிலை ஏற்பட்டது என்று அறியப்படவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்