புதுச்சேரியில் 12வது உலகத் தமிழ் மாநாடு.. பிரதமர், ஜனாதிபதி வருகை..!

Siva

ஞாயிறு, 2 மார்ச் 2025 (13:05 IST)
புதுச்சேரியில் உலகத் தமிழ் மாநாடு நடத்தப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி ஏற்கனவே சட்டசபையில் அறிவித்த நிலையில், இந்த மாநாட்டிற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

புதுச்சேரி கலை பண்பாட்டு துறை மேற்கொண்டு வரும் இந்த முன்னேற்பாடுகள் கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஜூலை மாதம் இறுதி வாரத்தில் 12வது உலகத் தமிழ் மாநாட்டை புதுச்சேரியில் நடத்த அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்த முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகத் தமிழ் மாநாட்டை நடத்தும் நிர்வாகிகள் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து, இது குறித்து ஆலோசனை நடத்தினர்.

மேலும், இந்த மாநாட்டில் ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழறிஞர்கள் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்