இதனால் அந்த குழந்தையின் பெற்றோர், குழந்தை நுரையீரலை தானம் செய்ய முடிவெடுத்தனர். இமோகன் போல்டன் என்ற 5 மாத பெண் குழந்தை ஒன்றுக்கு நுரையீரல் சரியாக செயல்படாமல், இரண்டு முறை நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இருந்தும் அந்த குழந்தையின் உடல்நிலை பூரணமாக குணமடையவில்லை.
இதனால் இந்த ஆண் குழந்தையின் நுரையீரல் தானம் செய்யப்பட்டதால், பெண் குழந்தைக்கு மூன்றாவது முறையாக நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மேலும் பிறந்து 41 நாட்களில் உடலுறுப்பு தானம் செய்த முதல் குழந்தை என்பதால், இவர் பெயர் வரலாற்றில் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.