இதே போல மெக்ஸிகோ நாட்டில் இரு வேறு இடங்களில் மெத்தனால் கலந்த எரிசாராயத்தை வாங்கிக் குடித்த 35 பேர் பலியாகியுள்ளனர். இந்த சம்பவமானது அந்த நாட்டில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மெக்ஸிகோவில் இதுவரை 42,500-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் 4,400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.