உலக பிரபல பணக்காரர்களான பில்கேட்ஸ், எலான் மஸ்க், ஜெஃப் பெசோஸ் போன்றவர்களின் ட்விட்டர் கணக்குகளும், அமெரிக்க அரசியல் பிரபலங்களான ஒபாமா, ஜோ பிடன் போன்றவர்களின் டிவிட்டர் கணக்குகளும் சமீபத்தில் ஹேக் செய்யப்பட்டன. அதில் பிட்காயின்கள் பற்றிய விளம்பரத்தை ஹேக்கர்கள் பதிவு செய்தனர். நீண்ட நேர முயற்சிக்கு பிறகு ட்விட்டர் நிறுவனம் அப்பதிவுகளை அவர்களின் கணக்கிலிருந்து நீக்கியது.
ஆனால் பதிவை நீக்குவதற்கு சில மணி நேரங்களிற்குள்ளேயே ரூ.75 லட்சம் அளவிலான தொகை ஹேக்கர்களால் பிட்காயின்களாக பெறப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து எஃப்.பி.ஐயின் சைபர் க்ரைம் பிரிவு தீவிர தேடுதல் வேட்டை நிகழ்த்திய நிலையில் ப்ளக்வாக்ஜோ என்ற புனைப்பெயர் கொண்ட ஹேக்கர் இந்த செயலை தனியாளாக செய்துள்ளது தெரிய வந்துள்ளது.
இந்த ப்ளக்வாக்ஜோவின் உண்மை பெயர் ஜோசப் ஜேம்ஸ் கான்னர் என்பதும், இவர் லண்டனின் லிவர்பூலில் வசித்து வரும் 21 வயது இளைஞர் என்பதும் தெரிய வந்துள்ளது. தற்போது ஸ்பெயினில் வசித்து வரும் இவரை பற்றிய முழு தகவல்களையும் எஃப்.பி.ஐ திரட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.