இதுவரை வியாழன் கோளுக்கு 80 நிலவுகள் இருப்பதாகவே அறியப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது மேலும் புதிதாக 12 நிலவுகள் வியாழனை சுற்றி வருவது கண்டறியப்பட்டுள்ளது. இதை சர்வதேச விண்வெளி கூட்டமைப்பு ஆராய்ந்து உறுதிப்படுத்தி அறிவித்துள்ளது. அதனால் தற்போது அதிக நிலவுகளை கொண்ட கோளாக 92 நிலவுகளுடன் வியாழன் அதிக நிலவுகளை கொண்ட சூரிய குடும்பத்தின் முதல் கோள் என்ற பெயரை பெற்றுள்ளது.