இந்தக் கப்பலில், சுமார் 250க்கும் மேற்பட்ட மக்கள் பயணம் மேற்கொண்டனர். அப்போது, இந்தக் கப்பல் பலுக் தீவு என்ற பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது கப்பலில் திடீரென்று தீப்பிடித்தது.
உடனே கப்பலில் தீ பரவியதை அடுத்து பயணிகள் அனைவரும் பதறியடித்துக் கொண்டு, உயிரைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டி கடலில் குதித்தனர். இதுகுறித்து கடலோர காவல்படைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள், கப்பலில் இருந்த பயணிகளை சிறிய படகுகளை ஏற்றினர்.
அதன்பின்னர், கப்பலில் எரிந்த தீயு அணைக்கப்பட்டது. இந்த விபத்தில் 3 குழந்தைகள் உள்பட மொத்தம் 12 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் மாயமாகியுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.