28 மணி நேரத்தில் கட்டப்பட்ட 10 மாடி கட்டிடம்: சீனா சாதனை!

ஞாயிறு, 20 ஜூன் 2021 (11:16 IST)
28 மணி நேரத்தில் கட்டப்பட்ட 10 மாடி கட்டிடம்: சீனா சாதனை!
வெறும் 28 மணி நேரத்தில் 10 மாடி கட்டிடத்தை சீன பொறியியல் வல்லுனர்கள் கட்டி முடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
சீனாவில் உள்ள சாங்ஷா என்ற நகரில் 10 மாடி அடுக்குமாடி கட்டிடம் ஒன்று 28 மணி நேரம் 45 நிமிடத்தில் கட்டி முடித்து உலக சாதனை படைத்து உள்ளது. பிராட்குரூப் என்ற கட்டுமான நிறுவனம் இந்த முயற்சியை கையில் எடுத்து அதில் வெற்றியும் பெற்று உள்ளது என்பது என்பது குறிப்பிடத்தக்கது
 
சுவர்கள், ஜன்னல்கள் என அனைத்தையும் மோல்டுகள் மூலம் இணைத்து கட்டியதாகவும் குடிநீர் மற்றும் மின்சார இணைப்பு இந்த 28 மணி நேரத்தில் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கட்டுமான நிறுவனமான பிராடிகுரூப் தெரிவித்துள்ளது 
 
மிகக் குறைந்த நேரத்தில் கட்டப்பட்ட அடுக்கு மாடி குடியிருப்பு என்ற உலக சாதனையை செய்துள்ள இந்த நிறுவனத்தில் பணியாற்றிய பொறியியல் கலைஞர்களுக்கும், நிறுவனத்திற்கும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்