"இலங்கையின் கொலைக்களம்" வீடியோ அமெரிக்காவில் திரையிடப்பட்டது!

வெள்ளி, 16 செப்டம்பர் 2011 (12:50 IST)
"இலங்கையின் கொலைக்களம்" வீடியோ பதிவு காட்சிகள் அமெரிக்காவில் திரையிடப்பட்டதைத் தொடர்ந்து இலங்கைக்கு தொடர் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இலங்கை அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி வரும் 'இலங்கையின் கொலைக்களம்' சேனல்-4 ஆவணப்படம் அமெரிக்காவின் மாஸ்செஸ்ட்ஸ் மாகாண ஆட்சிப்பீடத்தில் திரையிடப்பட்டது.

அனைத்துலக மன்னிப்புச்சபை ஏற்பாட்டில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமெரிக்க மக்கள் பிரதிநிதிகளான சுபா சுந்தரலிங்கம் மற்றும் ஜெராட் பிரான்சிஸ் ஆகியோரது பங்களிப்புடன் இந்த திரையிடல் இடம்பெற்றுள்ளது.

ஆவணப்பட திரையிடல் தொடர்பிலான முன்னறிவுப்புகள் ஏற்கனவே மாகாண ஊடகங்களில் வெளியிடப்பட்டிருந்ததால்,பொதுமக்களும் இத்திரையிடலை காணவந்திருந்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்