யு.எஸ். 'சூப்பர் பாம்' 2010 ல் தயாராகிவிடும் : பென்டகன்

செவ்வாய், 4 ஆகஸ்ட் 2009 (12:56 IST)
அமெரிக்காவின் 'சூப்பர் பாம்' 2010 ம் ஆண்டுக்குள் தயாராகிவிடும் என்று அந்நாட்டின் இராணுவ தலைமையகமான பென்டகன தெரிவித்துள்ளது.

6 மீட்டர் சுற்றளவு கொண்ட இந்த அணுகுண்டு, தாக்குதல் நடத்தக்கூடிய இடத்தில் 60 மீட்டர் ஆழத்திற்குள் ஊடுருவிய பின்னரே வெடிக்கக்கூடியது ஆகும்.

88 மில்லியன் டாலர் செலவில் தயாரிக்கப்படும் இந்த குண்டு, மற்ற குண்டுகளுக்கெல்லாம் 'தாய்' போன்றது என்றும், இதற்கு 2,400 கிலோ எடை கொண்ட வெடி மருந்து தேவை என்றும் பென்டகன் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்