முஷாரப்பை தண்டிக்க 71 % பாகிஸ்தானியர்கள் ஆதரவு

வெள்ளி, 28 ஆகஸ்ட் 2009 (19:39 IST)
பாகிஸ்தானில் அவசர நிலை பிரகடனத்தைக் கொண்டு வந்ததற்காக முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்பை தண்டிக்க அந்நாட்டின் 71 விழுக்காடு மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

முஷாரப் அதிபராக இருந்தபோது, கடந்த 2007 ஆம் ஆண்டில் கொண்டுவந்த அவசர நிலை பிரகடனம் சட்டவிரோதமானது என்று பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கியது.

அதே சமயம் இதற்காக முஷாரப்புக்கு தண்டனை அளிப்பது குறித்து பாகிஸ்தான் நாடாளுமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறிவிட்டது.

இந்நிலையில், அவசர நிலை பிரகடனத்தைக் கொண்டு வந்ததற்காக முஷாரப் தண்டிக்கப்பட வேண்டுமா என்பது குறித்து மக்களிடம் கருத்துக் கணிப்பு ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

இதில் 71 விழுக்காடு பேர் முஷாரப் தண்டிக்கப்பட வேண்டும் என்றே கருத்து தெரிவித்துள்ளனர்.19 விழுக்காடு பேர் இலேசான தண்டனை அளிக்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர். 4 விழுக்காடு பேர் கருத்து எதுவும் கூறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்