மனைவி பலரால் கற்பழிக்கப்படுவதை ரசித்த சைக்கோ கணவன்

Suresh

செவ்வாய், 22 ஏப்ரல் 2014 (16:04 IST)
பாகிஸ்தானில் லாகூர் நகரிலுள்ள காசியாபாத் பகுதியை சேர்ந்த பெண், தனது கணவர் தன் வயிற்றில் கண்காணிப்பு கருவியை பொருத்தியதாக கணவன் மீது நீதிமன்றத்தில் புகார் செய்துள்ளார்.
 
அவர் கூறியுள்ள புகாரில், தனக்கும் முகம்மது பயாஸ் என்பவருக்கும் 6 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது என்றும், ஒரு நாள் இரவு மாஜிஸ்திரேட் அக்ரம் ஆசாத் என்பவருடன் என் கணவர் குடிபோதையில் வந்து, தன்னை ஆசாத்துடன் உல்லாசமாக இருக்கும்படி வற்புறுத்தியதாகக் தெரிவித்துள்ளார்.
 
மேலும், இதற்கு தான் மறுத்ததால், என் கணவரின் ஒத்துழைப்புடன் ஆசாத் என்னை பலவந்தமாக கற்பழித்ததாகவும், இச்சம்பவத்துக்குப் பிறகு பல ஆண்களை வீட்டுக்கு அழைத்துவந்து, தன் கண் முன்னால் அவர்களால் நான் கற்பழிக்கப்படுவதை பார்ப்பதில் இன்பம் அடைந்தார் என்றும், இதேபோல பலருக்கு என்னை அவர் விருந்தாக்கியதால், வெறுத்துப் போன நான், அவரை விட்டுப் பிரிந்து என் தாய் வீட்டுக்கு வந்து விட்டேன். ஒரு நாள் சமாதானம் பேசுவதுபோல் வந்து, என் முகத்தில் மயக்கம் தரும் புகையை பாய்ச்சினார் இதனால் நான் மயக்கம் அடைந்துவிட்டேன்.
 
கண்விழித்துப் பார்த்தபோது, மருத்துவமனையில் கிடந்தேன். அடிவயிற்றில் தையல்கள் போடப்பட்டிருந்தன. கடுமையான வலியும், வேதனையும் ஏற்பட்டது. அங்கிருந்த ஒரு மருத்துவரின் உதவியுடன் எக்ஸ் ரே எடுத்துப் பார்த்தபோது, வாகனங்களைக் கண்காணிக்கும் டிராக்கர் என்னும் கண்காணிப்பு கருவியை என் வயிற்றுக்குள் பொருத்தியிருந்தது தெரியவந்தது.
 
என்னை கண்காணிப்பதற்காக இத்தகைய கீழ்தரமான காரியத்தில் ஈடுபட்ட, முகம்மது பயாஸ் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையினரிடம் புகார் தெரிவித்ததாகவும், ஆனால் அவர்மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அந்த புகாரில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
 
அவரது புகார் மனுவை விசாரித்த காசியாபாத் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி, பாதிக்கப்பட்ட பெண்ணின் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்தி, நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யும்படி காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்