போப்பின் இருக்கையில் அமர்ந்து விளையாடிய சுட்டி பையன்

வெள்ளி, 1 நவம்பர் 2013 (12:42 IST)
வாடிகனில் போப் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில், ஒரு சிறுவன் போப்பின் இருக்கையில் அமர்ந்தது பல்லாயிரக்கணக்கான மக்களை ஆச்சிரியத்தில் ஆழ்த்தியது.
FILE

வாடிகன் நகரத்தில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சதுக்கத்தில் போப் பிரான்சிஸ் 1 லட்சம் மக்களுடன் குடும்பத் திருவிழாவைக் கொண்டாடினார்.

அப்போது போப் பிரான்சிஸ் முதியவர்கள் அடுத்த தலைமுறையினரின் வாழ்வில் ஆற்றும் முக்கிய பங்கு குறித்து பேசிக் கொண்டிருந்தார். எல்லோரிடமும் அன்பு செலுத்துதல் குறித்தும், எல்லோராலும் நேசிக்கப்படுதல் குறித்தும் போப் பிரான்சிஸ் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த ஒரு சிறுவன் போப்பின் வெள்ளை இருக்கையில் அமர்ந்து கொண்டான்.

பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்த இடத்தில் தன்னுடைய இருக்கையில் வந்து அமர்ந்து கொண்ட அந்த சிறுவனை தொந்திரவு செய்யாமல், அவனைப் பார்த்து சிரித்த போப் தனது உரையைத் தொடர்ந்தார்.

நாற்காலியில் அமர்ந்துகொண்டு அவரையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்த சிறுவன் இறங்கி வந்து அவரது கால்களைக் கட்டிக்கொண்டான். இதனை கண்ட மக்கள் உற்சாகமடைந்து ஆரவாரம் செய்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்