புலிகளுடன் தொடர்புடைய ‌பத்திரிகையாளர் ‌பட்டியல்: இலங்கை மிரட்டல்

புதன், 3 ஜூன் 2009 (15:15 IST)
விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய பத்திரிகையாளர்களின் பட்டியலை வெளியிடுமாறு பாதுகாப்பு அமைச்சகத்தை கேட்டுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் லக்ஸ்மன் யாப்ப அபேவர்த்தன் மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து ஊடக அமைச்சகம் சார்பில் நடந்த மாநாடு ஒன்றில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது:

விடுதலைப் புலிகளுடன் வர்த்தகர்கள் மட்டுமல்லாது, ராணுவத்தில் இருப்பவர்களும் விடுதலைப் தொடர்பு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

விடுதலைப் புலிகளுடன் அரசியல்வாதிகளும், ஊடகவியலாளர்களும் தொடர்பு வைத்திருந்தனர். இதுகுறித்தும் விசாரணை நடத்தப்படும்.

விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தவர்கள் தொடர்பாக 2 வாரங்களுக்குள் சட்ட ரீதியான நடவடிக்கைகள் தொடங்கப்படும். விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்த ஊடகவியலாளர்கள் பற்றிய தகவல்களை வெளியிடுமாறு பாதுகாப்பு அமைச்சகத்திடம் கேட்டுக்கொண்டுள்ளோம்.

எனினும் இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரும், ஊடகவியலாளருமான போத்தல ஜயந்த மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து கவலைப்படுகிறோம். இது குறித்து அரச தலைவருக்கும் உடனடியாக அறிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக ஒருவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்