பன்னாட்டு சட்ட ஆணையம்: இந்தியா மீண்டும் தேர்வு

வெள்ளி, 18 நவம்பர் 2011 (15:22 IST)
பன்னாட்டு சட்ட ஆணையத்தில் இந்தியா மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது. ஜனவரி 1, 2012 முதல் 5 ஆண்டுகளுக்கு இந்தியா இதில் நீடிக்கும்.

இந்தியாவின் நரீந்தர் சிங் என்பவரை அந்த ஆணையத்தின் உறுப்பினராக ஐ.நா.பொதுப் பேரவை தேர்ந்தெடுத்துள்ளது.

இவர் 2002ஆம் ஆண்டு முதல் அயல்நாடுகளுக்கான சட்ட ஆலோசகர்களின் ஒருங்கிணைப்பாளராக 2002ஆம் ஆண்டு முதல் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பன்னட்டு சட்ட ஆணையத்தில் 34 உறுப்பினர்களைக் கொண்டது. இவர்கள் பன்னாட்டுச் சட்டத்தில் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருப்பது கட்டாயம்.

வெப்துனியாவைப் படிக்கவும்