பசி கொடுமையால் சிங்கத்தின் இறைச்சியை சாப்பிடும் அவலம்

சனி, 30 நவம்பர் 2013 (14:32 IST)
சிரியாவில் நடைபெறும் உள்நாட்டு போரால் பசி கொடுமையில் வாடும் மக்கள் ஒரு சிங்கத்தின் இறைச்சியை வெட்டுவதுபோல வெளியிடப்பட்டுள்ள ஒரு புகைப்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
FILE

சிரியாவில் தொடர்ந்து உள்நாட்டு போர் நடைபெறுவதால் பசி கொடுமையால் சிரியா மக்கள் சிங்கம் இறைச்சி சாப்பிடும் அவலம் ஏற்பட்டுள்ளது.

சிரியாவில் நடைபெறும் உள்நாட்டு போரால், இதுவரை சுமார் 1 லட்சத்து 25 ஆயிரம் பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் தற்போது பசியால் வாடும் மக்கள் உணவு கிடைக்காமல் மிருக காட்சி சாலைகளில் புகுந்து மிருகங்களை கொன்று அவற்றின் இறைச்சியை சாப்பிட்டு வருகின்றனர்.

கிழக்கு சவுதாவில் அல்குயாரியா அல் ஷாமா மிருக காட்சி சாலை உள்ளது. இங்கு இருந்த சிங்கத்தை கொன்று அதன் தலை மற்றும் உடலில் உள்ள இறைச்சியை 3 பேர் வெட்டுவது போன்ற புகைப்படம் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபோன்று பல மிருகங்களின் இறைச்சியை பசியால் வாடும் மக்கள் சாப்பிட்டு வருவதாக தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்