இஸ்ரேலுக்கு உதவி செய்ய அமெரிக்க ராணுவத்திற்கு ஜோ பைடன் உத்தரவு.. உலக போராக மாறுமா?

Siva

புதன், 2 அக்டோபர் 2024 (07:28 IST)
இஸ்ரேல் மீது ஈரான் வான்வழி தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இஸ்ரேல் நாட்டிற்கு உதவி செய்ய அமெரிக்க ராணுவத்திற்கு அதிபர் ஜோ பைடன் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று இரவு முதல் இஸ்ரேல் மீது ஈரான் ராணுவ தாக்குதல் நடத்தி வரும் நிலையில், மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ், ஜெருசலேம் உள்ளிட்ட பகுதிகளில் மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், அந்த பகுதியில் உள்ள மக்கள் பெரும் அச்சத்துடன் காணப்படுவதாகவும் கூறப்படுகிறது. இரவு முழுவதும் எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்காக உலக நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், இஸ்ரேலுக்கு உதவி செய்ய அமெரிக்க ராணுவத்திற்கு ஜோ பைடன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இஸ்ரேலை குறிவைத்து ஏவப்பட்ட ஏவுகணைகளை தடுத்து நிறுத்துமாறு அவர் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், மத்திய கிழக்கில் அமெரிக்க ராணுவம் உஷார் நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், இந்த போரின் விளைவாக உலகப்போராக மாறுமா என்ற அச்சம் அனைத்து நாடுகளின் மத்தியில் ஏற்பட்டுள்ளது.


Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்