இலங்கை அரசின் வசம் இருந்த 3 முன்னாள் தமிழ்ப் போராளிகள் மாயம்!

வியாழன், 17 மே 2012 (13:43 IST)
FILE
இலங்கை அரசு கடந்த ஆண்டு நடத்திய மறுவாழ்வுத் திட்டத்தில் பங்கேற்ற, சரணடைந்த 3 தமிழ்ப் போராளிகள் திடீரென மாயமாகியுள்ளானர்.

அரசு அதிகாரிகள்தான் இந்த 3 பேரையும் அழைத்துச் சென்றனர் என்று மனித உரிமைகள் பிரச்சாரகர் ஒருவர் தெரிவித்தார்.

மறுவாழ்வு திட்டத்தில் ராஜபக்ச பங்கேற்ற நிகழ்ச்சியில் இந்த 3 பேரும் பங்கேற்ற புகைப்படத்தை இந்த மூவரின் பெற்றோரும் பார்த்துள்ளனர். ஆனால் அவர்களது நிலை என்னவென்று இப்போது தெரியவில்லை.

மனித உரிமைகள் அமைப்பைச் சேர்ந்தவரும், முன்னாள் எம்.பி.யுமான மனோ கணேசன் மூவரின் புகைப்படங்களைப் பார்த்த பிறகு காவல்துறையிடம் அவர்கள் பற்றி கேட்டதாகத் தெரிகிறது. மேலும் அரசு, ராணுவ்ம் ஆகியோரிடையேயும் இந்த 3 பேர் பற்றி விசாரிக்கபட்டுள்ளது.

ஆனால் இவர்களிடமிருந்து எதிர்மறை பதில்கள்தான் கிடைத்துள்ளது. அதாவது தெரியாது என்றனர்.

இதற்கு முன்பும் கூட இது போன்ற நிகழ்ச்சிகளுக்குப் பிறகு போராளிகள் மாயமாகியிருக்கலாம் என்று பி.பி.சி.க்கு மனோ கணேசன் தெரிவித்தார்.

மேலும் இது போன்ற மறு வாழுவு நிகச்சிகளில் பங்கேற்கும் போராளிகளின் பெற்றோருக்குக் கூட அரசு அவர் முகாமில் இருக்கிறார் என்றோ நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் என்றோ தெரியப்படுத்துவதில்லை.

செய்தித் தாள் போட்டோவைப் பார்த்தே பெற்றோர் தெரிந்து கொள்ளவேண்டியிருக்கிறது.

இந்த விவகாரத்தை தற்போது கையிலெடுப்பதாகவும் பெற்றோர்கள் தன்னை அணுகலாம் என்றும் கூறியுள்ளார் மனோ கணேசன்.

வெப்துனியாவைப் படிக்கவும்