ஆப்கான் அதிபர் தேர்தல் : கர்சாய் வெற்றி பெற்றதாக அறிவிப்பு

திங்கள், 2 நவம்பர் 2009 (18:42 IST)
ஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ஹமித் கர்சாய் வெற்றி பெற்றதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் பெருமளவு முறைகேடுகள் நடைபெற்றதாக புகார் எழுந்ததையடுத்து,இது குறித்து விசாரணை நடத்திய ஐ.நா.,கர்சாய் பெற்ற வாக்குகளில் மூன்றில் ஒரு பகுதி செல்லாதது என அறிவித்தது.

இதனையடுத்து 30.5 விழுக்காடு வாக்குகளுடன் இரண்டாமிடத்தை பிடித்த அப்துல்லா அப்துல்லாவுக்கும், கர்சாயுக்குமிடையே மட்டும் வருகிற நவம்பர் 7 ஆம் தேதியன்று தேர்தல் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில்,கர்சாய் நியமித்த தேர்தல் ஆணையரை மாற்ற வேண்டுமென்றும்,அவ்வாறு மாற்றினால்தான் தேர்தல் நியாயமாக நடைபெறும் என்றும் அப்துல்லா கோரிக்கை விடுத்தார்.

ஆனால் அவரது வேண்டுகோள் நிராகரிக்கபட்டதையடுத்து போட்டியிலிருந்து விலகிக்கொள்வதாக அப்துல்லா அறிவித்தார்.

இதனையடுத்து வருகிற 7 ஆம் தேதியன்று நடத்த திட்டமிட்டிருந்த தேர்தலை ரத்து செய்வதாக இன்று அறிவித்த தேர்தல் ஆணையம்,போட்டி இல்லாததா அதிபர் தேர்தலில் ஹமித் கசாய் வெற்றி பெற்றதாக தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்