ஆப்கானுக்கு யு.எஸ். படை சென்றது தவறு: அமெரிக்கர்கள் கருத்து

செவ்வாய், 3 ஆகஸ்ட் 2010 (19:51 IST)
ஆப்கானிஸ்தானுக்கு அமெரிக்கா தனது படைகளை அனுப்பி தவறிழைத்துவிட்டதாக அந்நாட்டைச் சேர்ந்த 43 விழுக்காட்டினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவிடம் ஏராளமான நிதி மற்றும் இராணுவ உதவிகளை பெற்றுக்கொண்டே மறுபுறம், ஆப்கானிஸ்தானிலுள்ள தாலிபான் தீவிரவாதிகள் அமெரிக்க படையினரை எதிர்த்து போரிட பாகிஸ்தான் உதவி வந்ததை, "விக்கிலீக்ஸ்" இணைய தளம் அண்மையில் அம்பலப்படுத்தியது.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானுக்கு அமெரிக்கா தனது படைகளை அனுப்பி தவறிழைத்துவிட்டதாக அந்நாட்டைச் சேர்ந்த 43 விழுக்காட்டினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பிலேயே அவர்கள் மேற்கண்டவாறு கூறியுள்ளனர்.

அதே சமயம் தாலிபான்களுக்கு பாகிஸ்தான் உதவுவது மற்றும் அமெரிக்க இராணுவத்தின் செயல்பாடுகள் குறித்த இரகசிய ஆவணங்களை "விக்கிலீக்ஸ்" இணைய தளம் பகிரங்கப்படுத்தியிருக்கக்கூடாது என்று 66 விழுக்காடு அமெரிக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 25 விழுக்காட்டினர் மட்டுமே அதனை வெளியிட்டது சரி என்று கூறியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்