அணு உலை ஆய்வு: ஐ.நா. அதிகாரிகளுக்கான தடையை நீக்கியது தென்கொரியா!

செவ்வாய், 14 அக்டோபர் 2008 (17:36 IST)
பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகளின் பட்டியலில் இருந்து தென்கொரியாவை அமெரிக்கா நீக்கியதைத் தொடர்ந்து, தனது புளுடோனியம் அணு உலைகளை ஐ.நா. ஆய்வாளர்கள் பார்வையிடுவதற்கு விதித்திருந்த தடையை தென்கொரியா நீக்கியுள்ளது.

இந்தத் தடையை தென்கொரியா விலக்கியதன் மூலம் ஐ.நா ஆய்வாளர்கள் அந்நாட்டின் யோங்பயோன் பகுதியில் உள்ள புளுடோனியம் அணு உலைகளை ஆய்வு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

தென்கொரியாவின் இந்த தடை விலக்கல் முடிவுக்கு ஐ.நா பொதுச் செயலாளர் பான்-கி-மூன் ஆதரவு தெரிவித்துள்ளார். கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்ற பகுதியாக மாற்றுவதற்கு இந்த நடவடிக்கை மற்றுமொரு படிக்கல்லாக அமையும் என்று பான்-கி-மூன் கூறியதாக அவரது செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

இதற்கிடையில் யோங்பயோன் பகுதியில் உள்ள தனது அணு உலை கட்டமைப்புகளை தகர்க்கவும் தென்கொரியா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்