உலக சினிமா - கம்யூட்டர்

திங்கள், 21 மே 2018 (19:36 IST)
லியம் நீசன் என்ற பெயரை கேட்டாலே ஆக்‌ஷன் த்ரில்லர் ரசிகர்களுக்கு கொண்டாட்டம். இவரது படங்கள் அனைத்துமே சிறந்த ஆக்‌ஷன் கதையம்சங்கள் கூடிய படமாகும். இவருக்கேன்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
 
இவரது நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான கம்யூட்டர் திரைப்படம் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமைந்தது. லியம் நீசன் இப்படத்தில் காப்பீடு விற்பனையாளராக நடித்திருப்பார். தினமும் தனது அலுவலகத்திற்கு ரயிலில் செல்லும் அவர், ஒருநாள் தனது அலுவலகத்தில் இருந்து ரயலில் பயணிக்கும் போது வேரா ஃபிராகிகாவை சந்திக்கிறார்.
 
அப்போது வேரா ஒரு புதிரை அவரிடம் சொல்லுவிட்டு மறைந்துவிடுகிறாள். அந்த புதிரை அவர் ஓடும் ரயிலில் கட்டவிழ்கும் போது அவரும், அவரது குடும்பத்தினரும் சந்திக்கும் பிரச்சனையை மிக நேர்தியான திரைக்கதை மூலம் அருமையாக படமாக்கியுள்ளார் ஜாம் கொலெட் செர்ரா. ஜாம் இயக்கத்தில் லியம் நீசன் ஏற்கனவே நான் ஸ்டாப், ரன் ஆல் நைட், அன்னோன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். ஆனால், இந்த படம் லியம் நீசனின் கடைசி ஆக்‌ஷன் படம் என்பதால் அதிரடி சண்டை காட்சிகள் மிகவும் தத்ரூபமாக படமாக்கப்பட்டுள்ளது.
 
படத்தில் ரயில் விபத்துக்குள்ளாகி தடம் புரளும் காட்சிகள் ஹைலைட்டான காட்சிகளாகும். இப்படத்தின் ஆரம்பம் முதல் க்ளைமேக்ஸ் வரை ரசிகர்களை சீட்டின் நுனியிலே அமர வைத்திருப்பார் இயக்குனர். திரைக்கதைக்கு ஏற்ப ரோக் பேனோஸ் தனது பின்னனி இசையை மிக கச்சிதமாக அமைத்திருப்பார். இப்படிப்பட்ட இந்த திரைப்படத்திற்கு ஐம்டிபி 6.3 புள்ளிகள் கொடுத்தது மிகவும் வருத்தமளிக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்