பிணமாக கிடந்த பிரபல நடிகர்... ரசிகர்கள் பேரதிர்ச்சி!

செவ்வாய், 7 செப்டம்பர் 2021 (15:28 IST)
தி வயர்’ (The Wire) எனும் தொலைக்காட்சி தொடரில் ஒமர் லிட்டில் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் மைக்கேல் கே.வில்லியம்ஸ். அமெரிக்க நடிகரான வில்லியம்ஸ் ஐந்து பிரைம் டைம் எம்மி விருது பரிந்துரைகளைப் பெற்றுள்ளார்
 
இந்நிலையில் நேற்று (செப்டம்பர் 6) அவர், தன் வீட்டில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் நடிகர் மைக்கேல் அளவுக்கு அதிகமாக போதைப் பொருள் உட்கொண்டதால் இறந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். பிரபல நடிகரின் திடீர் மரணத்தால் அவரது ரசிகர்கள் பேரதிர்ச்சி அடைந்துவிட்டனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்