கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் கலெக்ஷ்ன்: பல ஆயிரம் கோடிகளை குவிக்கும் அவதார்!

சனி, 24 டிசம்பர் 2022 (14:56 IST)
கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் கலெக்ஷ்ன்: பல ஆயிரம் கோடிகளை குவிக்கும் அவதார்! 
 
பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவாகி வெளியாகியுள்ள படம் ‘அவதார்: தி வே ஆப் வாட்டர்’. கடந்த 2009ல் வெளியாகி பெரும் ஹிட் அடித்த அவதார் படத்தின் இரண்டாம் பாகமான இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
 
இப்படம் உலகம் முழுக்க பல கோடிகளை குவித்துள்ளது. இந்நிலையில், இதுவரை இந்தியளவில் மட்டுமே ரூ. 235 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.வெளியான வேகத்தில் வசூல் வேட்டையாடிய அவதார் பின்னர் கொஞ்சம் டல் அடித்தது. தற்போது கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் நாட்களில் மீண்டும் கலெக்ஷன் அதிகரித்துள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்