வனப் பாதுகாப்பில் பொதுமக்களை ஈடுபடுத்த புது முயற்சி!

சனி, 19 ஜனவரி 2008 (14:09 IST)
வனம் மற்றும் வன உயிரின பாதுகாப்பில் பொது மக்களை ஈடுபடுத்தும் வகையிலநன்கொடை வசூலிக்கப்படுகிறது. இதனை வசூலிக்க தனியாக முகவர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

எந்த ஒரு திட்டத்திலும் மதிப்பிடப்பட்டதற்கும் குறைவாகவே அரசு நிதி ஒதுக்கீடு செய்யும். வனத்துறை திட்டங்களுக்கு மட்டும் இது விதிவிலக்கல்ல. மேலும், வனம் மற்றும் வன உயிரின பாதுகாப்பில் அனைவருக்குகம் பங்கு உண்டு. இதுகுறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் வனத்துறையின் கடமை. ஆனால் அரசு துறைகளில் தற்போது நிலவும் ஆட்கள் பற்றாக்குறையால் இது சாத்தியமில்லாமல் போகிறது.

எனவே, வனத்தின் பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் அதேவேளையில், நிதி ஆதாரத்தையும் மேம்படுத்த மத்திய பிரதேச அரசு திட்டமிட்டுள்ளது. இப்பணிக்கு கமிஷன் அடிப்படையில் முகவர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அவர்கள் பொதுமக்களிடம் 'மத்திய பிரதேச புலிகள் அறக்கட்டளை' என்ற பெயரில் காசோலையாக நன்கொடை வசூலிப்பர். கார்ப்ரேட் நிறுவனங்கள், தொழிற்கூடங்களுகான இந்த வாழ்நாள் உறுப்பினர் கட்டணம் ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. முகவர்களுக்கான திட்டத்தை வனத்துறை வகுக்கிறது.

வனத்துறை அமைச்சர் குன்வர் விஜய் ஷா தலைமையில் நடந்த அறக்கட்டளை பொதுக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அப்போது, அனைத்து சரணாயங்களுக்கும் ஆம்புலன்ஸ் வழங்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார். பன்னா தேசிய பூங்காவோக்கு ஆம்புலன்ஸ் வழங்க உத்திரவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த அறக்கட்டளையின் உறுப்பினர்களுக்கு தேசிய பூங்காவிற்குள் இலவசமாக செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. சிங்கப்பூர் நிகில் நக்லி பூங்கா செல்வதற்காக ரூ.17.25 லட்சம் உட்பட ரூ.32.14 லட்சம் அறக்கட்டளை சார்பில் ஏற்கனவே வசூலிக்கப்பட்டுள்ளதாக கூட்டத்திலதெரிவிக்கப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்