செய்முறை:
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு 1 கப் அளவிற்கு எடுத்துக்கொள்ளவும். கோதுமை மாவுடன் 1/2 கப் அரிசி மாவு சிறிதளவு உப்பு சேர்த்த பிறகு 1 கப் அளவிற்கு தயிர் எடுத்து சேர்க்கவும். பிறகு பெரிய வெங்காயத்தை நறுக்கி, அதனை நன்றாக உதிர்த்து விட்டு சேர்க்கவும். அடுத்து நறுக்கிய பச்சை மிளகாயை சேர்க்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி நன்றாக காய்ந்த பிறகு 1 மணிநேரம் ஊறவைத்த மாவினை எடுத்து, எண்ணெய்யில் மாவினை சிறிய சிறிய உருண்டையாக போடவும். எண்ணெய்யில் போட்டதும் 20 நிமிடம் கழித்துபோண்டாவை திருப்பிவிட வேண்டும். நன்றாக வெந்தபிறகு போண்டாவை எடுத்துவிடலாம். சுவையான கோதுமை மாவு போண்டா தயார்.