நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு.
செய்முறை:
வாணலியில் தேவையான அளவு நல்லெண்ணெய் ஊற்றி, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும். பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கு, பீன்ஸ், கேரட், காலிஃப்ளவர் மற்றும் பச்சைப் பட்டாணியை சேர்த்துக் கிளறவும்.
இதனுடன் சிக்கன் கபாப் மசாலா, கரம் மசாலா, இஞ்சி - பூண்டு விழுது, மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கலந்து, கொத்தமல்லித் தழை தூவி, எலுமிச்சைச் சாற்றை ஊற்றிக் கிளறி, கொஞ்சம் தண்ணீர் தெளித்து வேகவிடவும். வெந்த காய்கறி மசாலாவை, 5 நிமிடம் ஆறவிடவும்.
பிறகு மூன்று முட்டைகளை பாத்திரத்தில் ஊற்றி நன்றாக கலக்கவும். பின்பு ஆறிய காய்கறி கலவையை முட்டையுடன் சேர்க்கவும். பணியாரக்கல்லின் குழிகளில் சிறிதளவு எண்ணெய் விட்டு, முட்டை - காய்கறி கலவையை ஊற்றி, பணியாரங்களாக சுட்டெடுக்கவும். சுவையான முட்டை பணியாரம் தயார்.