ஊறிய சம்பா கோதுமையுடன், கோதுமை மாவையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். அதனுடன் மிளகாய்த் தூள், சோம்புத் தூள், இஞ்சி, பூண்டு, முருங்கைக்கீரை மற்றும் உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து அடை மாவு பதத்தில் கரைத்து வைக்கவும்.
தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, சூடானவுடன் ஒரு கரண்டி மாவை எடுத்து ஊற்றவும். ஓரத்திலும் நடுவிலும் அரை தேக்கரண்டி எண்ணெயை ஊற்றி வேகவிடவும். 2 நிமிடங்கள் கழித்து திருப்பிப் போட்டு வேகவிட்டு எடுக்கவும். சுவையான கோதுமை அடை தயார். சட்னியுடன் பரிமாறவும்.