பிறகு, ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும், அதில் பட்டை, சோம்பு பிரியாணி இலை தாளித்து, பின் அதனுடன் நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்க வேண்டும்.
பின்னர் அதனுடன், தக்காளியை சேர்த்து வதக்கவும். பிறகு, அதனுடன் மிளகாய் தூள், தனியா தூள் கொஞ்சம் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி விட வேண்டும். நன்கு வதக்கியதும் அதனுடன் கத்திரிக்காய் சேர்த்து வதக்கவும்.