வறுத்த பின்னர் ஒரு முறை கழுவிக் கொள்ளவும். அதனுடன் ஒன்றரை லிட்டர் பால் சேர்த்துக் கொள்ளவும். குறைவான தீயில் வைத்து அரிசி பருப்பு மசிந்து வரும் வரை வேக வைக்கவும். பிறகு வெல்ல பாகு காய்ச்சுவதற்கு ஒரு பாத்திரத்தில் இரண்டரை லிட்டர் கப் வெல்லம் சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும். வெல்லம் கரைந்து ஓரளவு கொதித்ததும் தனியே எடுத்து வைக்கவும்.
அரிசி பருப்பு குழைந்த பின்னர் வெல்ல பாகை வடிகட்டி சேர்த்துக் கொள்ளவும். இதனை கலந்த பின்னர் 2 நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும். ஒரு பானில் 1 ஸ்பூன் நெய் சேர்த்துக் கொள்ளவும். நெய் சூடானதும் முந்திரி பருப்புகளை சேர்த்து லேசாக வறுக்கவும். அதனுடன் காய்ந்த திராட்சை சேர்த்து, உப்பி வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.