சுவையான ஸ்டஃப்டு வெண்டைக்காய் வறுவல் செய்ய...!!

தேவையான பொருட்கள்: 
 
வெண்டைக்காய் - அரை கிலோ 
மிளகாய் தூள் - 1  ஸ்பூன் 
கரம் மசாலா - 1 ஸ்பூன் 
கார்ன் ப்ளார் மாவு - 2  ஸ்பூன் 
மல்லித் தூள் -  கால் ஸ்பூன் 
அரிசி மாவு -  கால் ஸ்பூன் 
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு 
உப்பு - தேவையான அளவு  
செய்முறை: 
 
வெண்டைக்காயை நீரில் கழுவி, துணியால் துடைத்து, நீள துண்டுகளாக நறுக்கி நடுவில் கீறி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கரம் மசாலா, அரிசி மாவு, மல்லித் தூள், சோள மாவு, மிளகாய் தூள் போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து, தண்ணீர் சேர்க்காமல் நன்கு கலந்து  கொள்ள வேண்டும்.
இந்த கலந்த மசாலாவை வெண்டைக்காயின் நடுவில் வைத்து அரை மனி நேரம் ஊற வைக்கவும்.

கடாயை அடுப்பில் வைத்து, அதில்  பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பிரட்டி வைத்துள்ள வெண்டைக்காய் கலவையை சேர்த்து, பொன்னிறமாகும் வரை  நன்கு வறுத்து எடுக்கவும். சுவையான ஸ்டஃப்டு வெண்டைக்காய் வறுவல் தயார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்