கடாயில் எண்ணெய் விட்டு சீரகம், மிளகு, இஞ்சி, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை ஒன்றாக போட்டு வறுத்து ஆறவைக்கவும். பின்னர் அதை மிக்சியில் போட்டு தேங்காய்த்துருவல், சிறிதளவு தண்ணீர் சேர்த்து நைஸாக அரைக்கவும். இந்த விழுதை வதக்கி வைத்துள்ள அத்திக்காயுடன் சேர்த்து, வேகவைத்த பாசிப்பருப்பையும் சேர்க்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு பெருங்காயத்தூள் போட்டு தாளித்து கொட்டி ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும். இந்த கூட்டை சாதம், இட்லி, தோசை என எதனுடன் வேண்டுமானாலும் சாப்பிடலாம்.