நாவில் எச்சில் ஊறும் சுவையான தக்காளி ஊறுகாய் செய்ய...!

இட்லி, சப்பாத்தி, தோசை, தயிர் சாததிற்கு தொட்டுக்கொள்ள இந்த தக்காளி ஊறுகாய் சுவையாக இருக்கும். இந்த தக்காளி ஊறுகாய் பத்து நாட்கள் வரை  கெட்டுப்போகாது.
 
தேவையான பொருட்கள்:
 
தக்காளி - 1 கிலோ
காய்ந்த மிளகாய் - 4
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
தனி மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - 1 குழிக்கரண்டி
பெருங்காயம் - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
பூண்டு - 20 பல்
செய்முறை:
 
வெந்தயத்தை வெறும் கடாயில் போட்டு வறுத்து ஆறியதும் மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும். தக்காளியை பொடியாக நறிக்கி வைத்து கொள்ளவும்.
 
கடாயை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் பூண்டு, தக்காளி பின்னர் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு, பெருங்காயம் போட்டு நன்றாக வதக்குங்கள்.
 
தக்காளியில் உள்ள தண்ணீர் எல்லாம் நன்றாக வற்றியதும் தக்காளி நன்றாக சுருண்டு திக்காக எண்ணெய் மிதந்து வரும் சமயத்தில் பொடித்து வைத்துள்ள வெந்தயத் தூளை சேர்த்து நன்றாக கிளறி அடிப்பிலிருந்து இறக்குங்கள். சுவையான தக்காளி ஊறுகாய் தயார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்