உடலுக்கு ஆரோக்கியம் தரும் வாழைப்பூ துவையல் செய்வது எப்படி...?

வியாழன், 13 அக்டோபர் 2022 (12:16 IST)
தேவையான பொருட்கள்:

வாழைப்பூ - 1
கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
புளி - எலுமிச்சை அளவு
காய்ந்த மிளகாய் - 4
துருவிய தேங்காய் - 1/2 கப்
எண்ணெய் - 3 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
பெருங்காயத்தூள் - சிறிதளவு



செய்முறை:

வாழைப்பூவின் தேவையற்ற காம்புகளை நீக்கி சுத்தம் செய்து வைத்துக்கொள்ளுங்கள். சமைப்பதற்கு முன் அதை மோரில் ஊற வையுங்கள். கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, பெருங்காயத்தூள், புளி மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள்.

மேலும் படிக்க:மழைக்கேற்ற வாழைப்பூ வடை

பின் அதனை ஆற வையுங்கள். அதே கடாயில் வாழைப்பூவையும் வதக்கிக்கொள்ளுங்கள். முதலில் ஆற வைத்த கடலைப் பருப்பை அரைத்துக்கொள்ளுங்கள். அடுத்து தேங்காய் சேர்த்துக்கொள்ளுங்கள். பின் வாழைப்பூ மற்றும் உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.

கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து பொறிந்ததும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி அரைத்து வைத்துள்ள துவையலில் கொட்டி கலந்து விடவும். சுவையான வாழைப்பூ துவையல் தயார்.

Edited by Sasikala

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்