முந்திரிப்பருப்பு பக்கோடா!

செவ்வாய், 22 மே 2012 (15:13 IST)
தேவையான போருட்கள்:

முந்திரிப்பருப்பு - கால் கிலோ

இஞ்சி - 25 கிராம்

கடலைமாவு - 1 கிலோ

பச்சை மிளகாய் - 25கிராம்

டால்டா - 200 கிராம்

சீரகப்பொடி - அரை ஸ்பூன்

சோடா உப்பு - அரை ஸ்பூன்

ரீபைண்ட் ஆயில் அல்லது சுடுவதற்குரிய எண்ணெய்- 2 லிட்டர்

கருவேப்பிலை, கொத்தமல்லி

உப்பு தேவையான அளவு.

செய்முறை:

டால்டா, சோடா உப்பு, பொடியாக வெட்டிய இஞ்சி, பச்சை மிளகாய், சீரகத்தூள், மல்லி இலை, கருவேப்பிலை அனைத்தையும் சேர்த்து நன்றாகத் தேய்த்து, முந்திரிப்பருப்பையும் சேர்த்து சிறிது நேரம் கிளறி கடைசியில் மாவையும் சேர்த்து, தண்ணீர் சிறிது தெளித்து பிசைந்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் மாவி உதிர்த்துப் போட்டு பிறகு நல்ல கலர் வந்தவுடன் எடுத்து வைக்கவும்.

வெப்துனியாவைப் படிக்கவும்