முருங்கை‌க் கா‌ய் சூ‌ப்

வியாழன், 26 ஏப்ரல் 2012 (19:35 IST)
தேவையானவை:

முருங்கைக்காய் - 3
தக்காளி - 2
வெங்காயம் - 2
இஞ்சி
பூண்டு
கரம் மசாலாத் தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - ஒரு மேசைக்கரண்டி
பச்சை மிளகாய்
கொத்தமல்லி
புதினா
சோள மாவு
எலுமிச்சை பழம்

செ‌ய்முறை:

முருங்கைக்காயை ‌விர‌ல் ‌நீள‌த்‌தி‌ற்கு நறுக்கி கழு‌வி வை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம். தக்காளி, வெங்காயத்தையு‌ம் நறுக்‌கி வை‌த்து‌க் கொ‌ள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாக வெ‌ட்டி‌க் கொ‌ள்ளவு‌ம்.

இ‌ஞ்‌சி, பூ‌ண்டை ‌விழுதாக அரை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.

குக்கரில் நறுக்கிய முருங்கைக்காய், தக்காளி, பச்சை மிளகாய், வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, தேவையான அள‌வி‌ற்கு உப்பு, கரம் மசாலா தூள் ஆகியவற்றை போட்டு 2 1/2 ட‌ம்ள‌ர் தண்ணீர் ஊற்றி மூடி சுமா‌ர் 5 நிமிடம் வேக விடவும்.

ந‌ன்கு வெ‌ந்தது‌ம் அதனை ஒரு பாத்திரத்தில் வடிகட்டியை வைத்து, அதில் வேகவைத்த காய்கறிகளை போட்டு அதில் உள்ள சாற்றை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

பி‌ன்ன‌ர் சூ‌ப் ப‌ரிமாறுவத‌ற்கு மு‌ன்பு சூப்பை சுட வை‌த்து கொதித்ததும் மேலே கொத்துமல்லி தழை, புதினா ‌மிளகு தூ‌ள் தூவவும். பரிமாறும் போது மேலே எலுமிச்சை சாறை பிழிந்து பரிமாறவும்.

வெப்துனியாவைப் படிக்கவும்