வீட்டின் சமையலறை தென்மேற்கில் அமைப்பதால் பாதிப்புகளை ஏற்படுத்துமா...?
ஒரு கட்டிடத்தை கட்டிவிட்டு சிறிதுகாலம் அந்த இடத்தில் குடியிருந்தால் மட்டுமே, அந்த இடம் நன்மையை செய்கிறதா அல்லது தீமையை செய்கிறதா என்பதை உணர முடியும்.
இந்த பூமி மீது கட்டக்கூடிய வீடுகளில் தென்கிழக்கை அக்னிக்கு உண்டான பகுதியாக நமது முன்னோர்கள் பிரித்து வைத்துள்ளார்கள். பொதுவாக சமையலறை தென்கிழக்கு, வடமேற்கில் வரும்போது பெரிய பாதிப்புகள் ஏதும் ஏற்படுவதில்லை.
பாதிப்புகள்:
இயற்கைக்கு மாறாக வாழ முற்படும்போது ஏற்படும் பிரச்சனைகள் அனைத்தும் வரக்கூடும். கணவன் மனைவி உறவில் விரிசல். வீட்டில் எந்நேரமும் ஏதாவது ஒரு பிரச்சனையை பற்றியே விவாதித்து கொண்டிருப்பது.
மூத்த வாரிசு கடுமையாக பாதிக்கப்படுவது. ஆண்களுக்கு மட்டும் மனநலம் தொடர்பான பிரச்சனைகள் வருவது. நிரந்தரமற்ற வேலை.
மிகப்பெரிய பதவிலிருந்தும் தன்னுடைய அதிகாரத்தை உபயோகப்படுத்த முடியாத நிலையில் இருப்பது. அதேபோல் தன்னுடைய வாரிசுக்கும் நல்ல வேலை அமைத்து கொடுக்க முடியாத நிலை. தீராத கடன் சுமை.
இதுபோன்ற இன்னும் சில குறிப்பிடும்படியான பிரச்சனைகள் அக்னியை மாற்றி அமைக்கும்போது வரக்கூடும்.