தலைவாசலை வாஸ்துப்படி அமைப்பது சிறப்பான பலன்களை பெற்று தருமா...?

தலைவாசல் தீய சக்திகளை வாசலோடு தடுத்து நிறுத்தும் ஆற்றல் கொண்டது. அதனால்தான், வீடு கட்டும்போது தலைவாசல் பொருத்தும்போதும், புதுவீடு கட்டி  குடியேறும்போதும் தலைவாசலுக்கு பூஜைகள் செய்வது வழக்கம். 


நிலை வாசற்படியானது, நல்ல சக்திகளை உள்ளே ஈர்த்து, கெட்ட சக்திகளை தடுத்து நிறுத்தும்  சக்தி கொண்டது.
 
வீட்டிற்கு தலைவாசல் முக்கியமானது. விஷேச தினங்களில் தலைவாசலுக்கு மஞ்சள் தேய்த்து குங்குமம் வைக்க வேண்டும். மாவிலை தோரணம் கட்டி, பூமாலை அல்லது பூக்கள் கொண்டு அலங்கரிப்பது நமது வழக்கம். 
 
வெளியில் சென்று வீடு திரும்பும்போது தெருவில் உள்ள மண், தூசி, அழுக்குகளை வீட்டுக்குள் வரும்முன் துடைத்துக்கொண்டு வர மிதியடிகளை போடுவது  வழக்கம். அவை சிவப்பு வண்ணத்தில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளலாம். சிவப்பு வண்ணம் பாசிட்டிவ் எனர்ஜியை பாசிட்டிவ் எனர்ஜியை தக்கவைக்கும். இதன்  காரணமாகத்தான் சிவப்பு கம்பள வரவேற்பு முக்கியமான கௌரவமாக கருதப்படுகிறது. 
 
தலைவாசலை வாஸ்துப்படி அமைப்பது சிறப்பான பலனை தரும். இழைத்து, இழைத்து பலவித கனவுகளோடு வீட்டை கட்டி குடியேறினாலும், தலைவாசல்  சரியான விதத்தில் அமைக்கப்படவில்லையென்றால் அவ்வீட்டில் மகாலட்சுமி நுழைய மாட்டாள். மகிழ்ச்சி தங்காது. மொத்தத்தில் அவ்வீட்டில் எந்த நன்மையும்  வந்து சேராது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்