தில ஹோமம் செய்வதால் பித்ரு தோஷத்தை போக்க முடியுமா...?

பித்ரு தோஷத்தால் ஏற்படும் குழந்தையின்மை, அல்லது குழந்தை உருவாகாது இருத்தல், கர்ப்பம் தங்காது இருத்தல், பிறந்த குழந்தை இறந்து போதல் போன்ற தோஷங்கள் ஏற்படலாம். இப்படிப்பட்ட தோஷங்களைப் போக்கவும் தில ஹோமம் செய்யப்பட வேண்டும்.

மற்ற ஹோமங்களைப் போலல்லாமல் மறைந்தவர்களுக்கு சம்ஸ்காரம் செய்வதைப்போல் இறந்தவர்களை வெள்ளியாலான பிரதமையில் ப்ரேத ஸ்வரூபியாக  ஆவாஹனம் செய்து, செய்யப்பட வேண்டிய இந்த தில ஹோமத்தை, தாங்கள் வசிக்கும் வீட்டில் செய்வதில்லை, ராமேஸ்வரம், திருவெண்காடு, ஸ்ரீவாஞ்சியம், பவானி, ஸ்ரீரங்கபட்டினம் போன்ற பொதுவான இடங்களில் செய்யவேண்டும்.
 
ஹோமத்தின் இறுதியில், இறந்த முன்னோர்களை பிரேத ஸ்வரூபத்திலிருந்து விடுபட்டு பித்ருக்களுடன் ஒன்றாக சேர்ப்பிக்கும் விதமாக பித்ரு பிரதமைகளை சமுத்திரத்திலோ அல்லது கடலில் கலக்கும் புண்ணிய நதிகளிலோ கரைத்துவிட்டு ஸ்னானம் செய்ய வேண்டும், இதனால் பித்ரு தோஷம் விலகி, குழந்தைகள்  பிறந்து, தீர்க்க ஆயுளுடன் வாழ்வார்கள்.
 
கிருஷ்ண பக்ஷம் சனிக்கிழமை அமாவாசை பரணி நட்சத்திரம் குளிகன் இருக்கும் ராசி ஆகிய நாட்கள் தில ஹோமத்துக்குச் சிறந்தவை. தில ஹோமம் செய்து  பித்ரு தோஷம் விலகிய பின்னர் அமாவாசை போன்ற நாட்களில் தர்ப்பணமும் பெற்றோருக்கு வருடா வருடம் சிராத்தம் ஆகியவற்றையும் முறையாக செய்ய  வேண்டும். அப்போதுதான் செய்த தில ஹோமம் முழுமையான பலனைத் தரும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்