வீட்டில் மாடிப்படிகள் அமைப்பதில் உள்ள வாஸ்து குறிப்புகள் !!

வெள்ளி, 6 மே 2022 (17:25 IST)
ஒரு இடத்திற்கு தலைவாசல் அமைப்பதில் எந்த அளவுக்கு கவனம் செலுத்துகிறோமோ அது போல்தான் ஒரு கட்டிடத்திற்கு படிக்கட்டு அமைக்கும்போது மிகவும் கவனமாக செயல்படவேண்டும்.


ஒரு இடத்திற்கு உட்புறத்தில் படிக்கட்டு அமைக்க விரும்பினால் அதனை தெற்கு அல்லது மேற்கு பகுதி நடுவில் அமைப்பது சிறந்தது.

ஒரு இடத்திற்கு வெளிப்புறத்தில் படிக்கட்டு அமைக்க விரும்பினால் அதனை தென்கிழக்கு, தென்மேற்கு மற்றும் வடமேற்கு முலையில் திறந்த வெளி படிக்கட்டு "கேண்டிலிவேர்" முறையில் மட்டுமே அமைக்க வேண்டும்.

வீட்டிற்கான வாசல் படிகள் அமைக்க வாசற்படியில் உயரத்திலிருந்து ஒன்பதில் ஐந்து பங்கு அகலம் இருக்க வேண்டும். அதாவது உயரம் 9 அடிகள் இருந்தால் அகலம் 5 அடிகள் இருக்கவேண்டும். இவ்வாறு அமைக்க லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.

வெளியில் உள்ள வாசல்படியை விட உள் வாசல்படிகள் இயர்ந்திருந்தால் அதிக நன்மை உண்டு. வீட்டிற்கு வாசல் படிகளை கருங்கற்களால் அமைக்க கூடாது. வாசல் படிகள் எண்ணிக்கை இரட்டைப்படையாக இருப்பது நல்லது.

வீட்டிற்குள் நுழையும்போதும் வெளியில் செல்லும் போதும் நம் கண்களில் சுவாமி படங்கள் படும்படி வைக்கவேண்டும். பொதுவாக மாடிப் படிகளை வீட்டின் இடது புறத்தில் தான் அமைக்க வேண்டும். ஜாதகப்படி மாற்றிக்கொள்வது சிறப்பை தரும்.

மாடிப்படிகளை வடக்கு அல்லது கிழக்கு திசைகள் நோக்கி ஏறுமாறு அமைத்திட வேண்டும். மாடி ஏறும் போது நமது வலதுகை கைப்பிடிச் சுவரை பிடித்து ஏறுமாறு இருக்கவேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்