வீட்டில் எந்த திசையிலாவது வெட்டு அல்லது வளைவுகள் இருந் தால், அது வீட்டை பாதிக்கும். முக்கியமாக தென் மேற்கு, வடக்கு, வட கிழக்கு, தென் கிழக்கு திசைகளில் இருந்தால், பெரிய பிரச்சனைகள் ஏற்படும். இதன் பின்னணியில் பல ரகசியங்கள் அடங்கியிருக்கிறது.
மிகவும் அடர்த்தியான வண்ணங்களை கொண்டு சுவற்றில் வர்ணங்களை பூச கூடாது. முக்கியமாக சிவப்பு மற்றும் செந்நீலம் நிறங்கள். இது நோயை உண்டாகும் சக்தியை தூண்டும். போன்சாய் மரங்களை வீட்டினுள் வளர்க்காதீர்கள். அது நீங்கள் இருக்கும் துறையில், வளர்ச்சிக்கு தடை போடும்.
வீட்டு தரையை வாரம் இரண்டு முறை, உப்புள்ள கடல் தண்ணீரால் துடைத்தால், வீட்டில் இருக்கும் எதிர்மறையான சக்திகள் ஓடியே போகும். நல்ல பாடல்களை, தினமும் நான்கு அல்லது ஐந்து முறை ஒலிக்க விட்டால், வீட்டில் அமைதி நிலவும்.