ராசிக்கு ஏற்ப வாசற்கால் எந்த திசையில் அமைய வேண்டும்...?

மனையடி சாஸ்திரப் பிரகாரம் வீடு கட்டுவதற்கும் வீட்டிற்குள் அறைகள் கட்டுவதற்கும் அவ்வீட்டின் எஜமானனால் காலடி அளந்ததன் பேரில் அடியைக் கண்டு அறிந்துள்ள அகலத்திற்கும் நீளத்திற்கும் பலன்கள் அறியவும். 
6 - அடி நன்மை, 7 - அடி தரித்திரம், 8 - அடி நல்ல பாக்கியம் தரும், 9 - அடி கெடுதல் தரும், 10 - அடி ஆடுமாடு சுபிட்சம், 11 - அடி பால்பாக்கியம், 12 - அடி  விரோதம், செல்வம் குறையும், 13 - அடி ஆரோக்கியம் குறைவு, 14- அடி சஞ்சலம், மனக்கவலை நஷ்டம், 15- அடி காரியபங்கம், பாக்கியம் சேராது, 16- அடி  மிகுந்த செல்வமுண்டு, 17- அடி அரசனைப்போல் பாக்கியம் சேரும். 18- அடி அமர்ந்த மனை பாழாம், 19- அடி மனைவி, புத்திரர், கவலைதரும், 20- அடி  ராஜயோகம் பெற்று வாழ்வார்.
 
ராசிக்கு ஏற்ப வாசற்கால்:
 
ரிஷபம, மிதுனம், கடக ராசியில் பிறந்தவர்களுக்கு வடக்கு வாயில் வீடும், சிம்மம், கன்னி, துலாம் ராசியில் ஜெனனமானவர்கள், கிழக்கு வாயில் வீடும், தெற்கு  வாயில் வீடும், விருச்சிகம், தனுசு, மகர ராசியில் ஜெனனமானவர்கள் தெற்கு வாயில் வீடும், கும்பம், மீனம் மேஷ ராசியில் ஜெனனமானவர்கள் தெற்கு வாயில் வீடும் கட்டினால் சுபங்கள் விசேஷமாக நடக்கும்
 
வீடு கட்ட வேண்டிய மாதங்கள்:
 
வைகாசி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை ஆகிய மாதங்கள் வீடு கட்ட உத்தமம் ஆகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்