நவராத்திரி என்பது ஒன்பது நாட்களிலும் இரண்டு முதல் ஒன்பது வயது வரையிலுள்ள சிறுமிகளை அம்பாளாக பாவித்து, வயது வரிசைப்படி, ஒரு நாளைக்கு ஒரு குழந்தை வீதம், குழந்தைகளுக்கு அலங்காரம் செய்து, பூஜித்து வழிபடுவது முறையாகும்.
முதல் மூன்று நாட்களில் துர்க்கையின் வழிபாடு, இடை மூன்று நாட்கள் லட்சுமி வழிபாடு, கடை மூன்று நாட்கள் சரஸ்வதி வழிபாடு என நவராத்தியின் ஒன்பது நாட்களில் நவகன்னிகா வழிபாடு செய்யப்படுகிறது.