‌பெ‌ண்களு‌க்கு தா‌ம்பூல‌ம் அ‌ளி‌க்க வே‌ண்டு‌ம்

வெள்ளி, 8 அக்டோபர் 2010 (17:37 IST)
கொலு வை‌த்து கொ‌ண்டாட‌ப்படு‌ம் நவரா‌த்‌தி‌ரி ‌விழா‌வி‌ன்போது, ‌வீ‌ட்டி‌ல் வை‌த்‌திரு‌க்கு‌ம் கொலுவை‌க் காண வரு‌ம் பெ‌ண்களு‌க்கு தா‌ம்பூல‌ம் அ‌ளி‌க்க வே‌ண்டு‌ம்.

அ‌வ்வாறு தா‌ம்பூல‌ம் அ‌ளி‌‌க்கு‌ம் போது வெறு‌ம் வெ‌ற்‌றிலை‌ப் பா‌க்கு, பூ, பழ‌ம் ம‌ட்டும‌ல்லாம‌ல் பொ‌ட்டு‌ப் பா‌க்கெ‌ட், க‌ந்தசஷ‌்டி கவச‌ப் பு‌த்தக‌ம் போ‌ன்றவ‌ற்றையு‌ம் அ‌ளி‌த்தா‌ல் பயனு‌ள்ளதாகவு‌ம் இரு‌க்கு‌ம்.

த‌ற்போது அழகழகான ‌பிளா‌ஸ்டி‌க் த‌ட்டுக‌ள் ம‌லிவான ‌விலை‌யி‌ல் ‌வி‌ற்க‌ப்படு‌கிறது. அவ‌ற்றை வா‌ங்‌கி வ‌ந்து ஒ‌வ்வொரு த‌ட்டிலு‌ம் ஒ‌வ்வொருவரு‌‌க்கு தா‌ம்பூல‌ம் வை‌த்து‌க் கொடு‌க்கலா‌ம்.

ம‌திய வேளை‌யி‌ல் தா‌ம்பூல‌ங்களை ‌சிறு கவ‌ரி‌ல் போ‌ட்டு வை‌த்து ‌வி‌ட்டா‌ல் பெ‌ண்க‌ள் வ‌ந்த ‌பிறகு எதையு‌ம் தேடாம‌ல், கவ‌ரை எடு‌த்து‌க் கொடு‌த்து ‌விடலா‌ம்.

நைவே‌த்‌திய‌‌ம் செ‌ய்ய‌ப்ப‌ட்ட ப‌ட்சண‌ங்களை‌க் கொடு‌க்க, ‌பிளா‌ஸ்டி‌க் ட‌ம்ள‌ர்களை‌ப் பய‌ன்படு‌த்தாம‌ல், கா‌கித ட‌ம்ள‌ர் அ‌ல்லது தொ‌ன்னைகளை‌ப் பய‌ன்படு‌த்‌தினா‌ல் சு‌ற்று‌ச்சூழலை‌க் கா‌க்கலா‌ம்.

வெப்துனியாவைப் படிக்கவும்